என் கைப்பிடித்து நடை பழகியவள் ,
ஆனாலும் என்னை படிப்பில் முந்தியவள்,
அப்பா சைக்கில்ளை ஓட்ட முற்பட்டு விழுந்தபோது
முதலில் இதை ஓட்டு என்று 3 சக்கர சைக்கிளை என் அருகே நிறுத்தினாய் ,
அதற்காக தெரு தெருவாக உன்னை விரட்டினேன்
உன் வகுப்பு தோழன் , உன் ஜடையை பிடித்து இழுக்க
அவனுடைய வேண்டுதல் குடிமியை வெட்டி ,
கணக்கு வாத்தியார் அடிப்பின்ன,
நீ வீட்டுக்கு ஓடிய ஓட்டம் ,
என் கல்லூரி கதைகளை பகிர்ந்து
கொண்ட நல்ல தோழி ஆனாய்.
எங்கள் வீட்டு சிறு பெண்
இன்று அடுத்த வீட்டு தலைவி ஆகிறாய்
எல்லோரிடமும் ஆசீர்வாதம் வாங்கினாய்
சொல்லிவிட்டு கிளம்பினாய்
என்னிடம் மட்டும் சொல்லாமல்
எல்லோரும் என்னை பார்க்க
நான் உன்னை பார்க்க ,
என் கண்ணில் இருந்து மறந்தாய்
நம் வீட்டுக்கு வந்து ,
உன் அறையில் படுத்து அழ ஆரம்பித்தேன் ,
என் செல் சிணுங்க ,
எடுத்தேன் உன் அழுகை கேட்டு கொண்டே இருக்கிறது.
குறிப்பு : மக்களே சத்தியமா இது கவிதை இல்ல , ஆனா கவிதை மாதிரி
Thursday, December 6, 2007
தங்கை
Posted by
காஞ்சி பையன்
at
1:26 AM
Subscribe to:
Post Comments (Atom)
11 comments:
வார்த்தைகள் வடிவில் ஒரு பாசமலர்
நன்றி இலா ,
பாராட்டே ஒரு கவிதை யா !
சூப்பரா இருக்கு தல, கலக்குங்க... வாழ்த்துக்கள்
நண்பா கண் கலங்க வச்சீட டா
P.A.விக்னேஷ்வரன் said...
//சூப்பரா இருக்கு தல, கலக்குங்க... வாழ்த்துக்கள்//
நன்றி விக்னேஷ்வரன் , ஆனா நீங்க சூப்பரா இருக்குனு சொன்னது குறிப்பு : பத்தி இல்லையே :)
Ashok said...
//நண்பா கண் கலங்க வச்சீட டா//
ஹாய் நண்பா ,
உனக்கு ஒரே அதிர்ச்சிய இருக்குமே, சரியா தமிழே வராத என் கவிதை பார்த்து ,
chea chea apadilam ilea thale... kavithaiyathan supera irukunu sonen...
P.A.விக்னேஷ்வரன் said...
//chea chea apadilam ilea thale... kavithaiyathan supera irukunu sonen...//
nanri illaiya Thalapathi ,nan valai povirku puthiyavan , so inimale ungal valai pakkathai padikiran
என்ன சொல்றிங்க தல புரியல....!!@@%
P.A.விக்னேஷ்வரன் said...
//என்ன சொல்றிங்க தல புரியல....!!@@%//
நன்றி இளைய தளபதி , நான் வலை பக்கத்திற்கு புதியவன் , so இனிமேல் உங்கள் வலை பக்கத்தை படித்து உங்களை எல்லாம் தெரிந்து கொள்கிறேன்
ஓகே ஓகே... படிங்க... என் வலைப்பதிவின் முகவரி இருக்க தல... உங்க ஊரின் பெருமைகளை பற்றி சொல்லுங்களேன்... என்ன மாறி வெளீயூர் ஆளூங்க தெரிஞிக்க முடியும்...
Post a Comment