Thursday, December 20, 2007

கண்ணீர்


போர் எவன் கண்டுபிடித்தான் இதை
விழி மூடும் நேரத்தில், உலகயே கண்மூடச்செய்யும் - அணுகுண்டுகள் நம்மிடம்
பட்டினிச் சாவை தடுத்திட மனம் இல்லை நம்மிடம்
மனிதனுக்கு ஆறுஅறிவாம்- ச்சீ
வேட்டைகூட மிருகத்தின் பசிக்குத்தான் தீனி
இந்த மனிதனின் ஆணவத்திற்க்கு எத்தனை மக்களின் உயிர் தீனி
அழக்கூட நேரம் இன்றி இறந்து போனாய்
இனி உன்னை பார்த்து இந்த உலகம் அழட்டும் இதுவே தன் கடைசி தவறு என்று

Monday, December 17, 2007

கேள்வி பிறந்தது அன்று நல்ல பதிலும் கிடைத்தது இன்று

இதே நாள் 1903 ஆண்டு- ரைட் சகோதரர்கள் வடக்கு கரோலினாவில் முதன்முதலில் பன்னிரெண்டு வினாடிகள் எஞ்சின் உந்தும் ஊர்தியில் (அதாங்க பிளைட்) பறந்தனர். நன்றி: விக்கிபீடியா

Thursday, December 13, 2007

என்னை கவர்ந்த நிகழ்வுகள்

விவேகானந்தர் வாழ்வில் நடந்த நிகழ்ச்சி

அறிவியல் புரட்சியால் உலகை திரும்பி பார்க்கவைத்த அமெரிக்காவை , இந்தியாவின் பக்கம் திரும்ப செய்ததில் பெரும்பங்கு விவேகானந்தரை சாரும் .

அமெரிக்காவில் பல இடங்களில் அவர் சொர்பொழிவு செய்தார் , அவ்வாரு ஒரு இடத்தில் சொர்பொழிவு முடித்துவிட்டு , மக்களிடம் சகஜமாக பேசிக்கொண்டு இருந்தார் .
அப்பொழுது ஒரு பெண்மனி , அவரிடம் " நீங்கள் என்னை கல்யாணம் செய்து கொள்விற்களா" என்று கேட்டாள்.ஒரு நிமிடம் விவேகானந்தர் அதிர்ந்துவிட்டார் , பொதுவாக அமெரிக்கர்கள் வெளிபடையானவர்கள்.

விவேகானந்தர் அப் பெண்மனியை பார்த்து கேட்டார்" என்னிடம் உள்ள எது , உங்களை அவ்வாறு கேட்க தூண்டியது ? ,ஏன் எனில் நான் அதை திருத்தி கொள்ளவேண்டும்" என்றார்


அதற்கு அப்பெண்மனி சொன்னாள் " உங்களின் அறிவு திறன் [ Your Intelligent ] ஆகையால் உங்களை நான் திருமணம் செய்துகொண்டால் , உங்களை போல அறிவுள்ள குழந்தை பெற்று கொள்ளவே நான் கேட்கிறேன்"என்றாள் .

அதற்க்கு விவேகானந்தர் சிரித்துகொன்டே கூறினார் " அம்மா அதற்க்கு நீங்கள் 1 வருடம் காத்திருக்க வேண்டும் அதுமட்டும்மில்லை அறிவுள்ள பிள்ளைக்கும் உத்திரவாதம் இல்லை, ஆகையால் என்னையே உங்கள் மகனாக ஏற்றுக்கொள்ளுங்கள்" என்று கூறினார்

குறிப்பு: மக்களே, நமக்கு நம் முன்னோர்கள் விட்டுசென்றுள்ள பெருமைகளை பார்திர்களா ! .

Wednesday, December 12, 2007

தலைவா,பிறந்தநாள் வாழ்த்துகள்




உன் விழி பார்க்கும் இடமெல்லாம் எங்கள் வழியாகும்

Sunday, December 9, 2007

குறும்பு

பேசும் படம்






Thursday, December 6, 2007

தங்கை

என் கைப்பிடித்து நடை பழகியவள் ,
ஆனாலும் என்னை படிப்பில் முந்தியவள்,



அப்பா சைக்கில்ளை ஓட்ட முற்பட்டு விழுந்தபோது
முதலில் இதை ஓட்டு என்று 3 சக்கர சைக்கிளை என் அருகே நிறுத்தினாய் ,
அதற்காக தெரு தெருவாக உன்னை விரட்டினேன்


உன் வகுப்பு தோழன் , உன் ஜடையை பிடித்து இழுக்க
அவனுடைய வேண்டுதல் குடிமியை வெட்டி ,
கணக்கு வாத்தியார் அடிப்பின்ன,
நீ வீட்டுக்கு ஓடிய ஓட்டம் ,


என் கல்லூரி கதைகளை பகிர்ந்து
கொண்ட நல்ல தோழி ஆனாய்.





எங்கள் வீட்டு சிறு பெண்
இன்று அடுத்த வீட்டு தலைவி ஆகிறாய்
எல்லோரிடமும் ஆசீர்வாதம் வாங்கினாய்
சொல்லிவிட்டு கிளம்பினாய்
என்னிடம் மட்டும் சொல்லாமல்
எல்லோரும் என்னை பார்க்க
நான் உன்னை பார்க்க ,
என் கண்ணில் இருந்து மறந்தாய்





நம் வீட்டுக்கு வந்து ,
உன் அறையில் படுத்து அழ ஆரம்பித்தேன் ,
என் செல் சிணுங்க ,

எடுத்தேன் உன் அழுகை கேட்டு கொண்டே இருக்கிறது.

குறிப்பு : மக்களே சத்தியமா இது கவிதை இல்ல , ஆனா கவிதை மாதிரி

Wednesday, December 5, 2007

தருமியின் கேள்வி



எனது பதிவில் புதிய கதாபாத்திரம் தருமியை சேர்த்து இருக்கிறேன் , அவருக்கு கேள்வி கேட்க மட்டுமே தெரியும் என்பதால், உங்கள் கருத்துக்களை பதிலாக சொல்லலாம்.


சாலை மறியலால், தருமியும் , புலவரும் [சிவாஜி] ட்ராபிக்ஜாமில் மாட்டிக்கொண்டு இருக்கிறார்கள் ,




தருமி: " ஏங்க இப்படி காலை 10 மணிக்கு போராட்டம் , மறியல்னு நடத்தறான்களே , இவங்களுக்கு என்ன வேலை ? , இவங்க பையனோ அல்லது பொண்ணு பார்த்த என்ன நினைப்பாங்க ?, சரி இதனால எதாவது ப்ரோஜனம் இருக்கா ? , அப்பனா இவங்களுக்கு வருமானம் ஏதூ? . அப்போ ஒரு சாதரண கட்சிசாரா குடிமகன் அரசாங்கத்திடம் எப்படி தன் கருத்தை சொல்லுவது , அது எப்படி மீடியாவுல வரும் , "



புலவர் : அரசியல இது எல்லாம் சகஜம்ப !

Tuesday, December 4, 2007

சும்மா 'ங்க




தமிழ்மணத்தில் என் பதிவை சேர்க்க 3 பதிவுகள் தேவை என்பதால் இந்த பதிவு ,

காஞ்சியை பற்றி

அன்பான வலைப்பூ மக்களுக்கு ,
நான் பிறந்து வளர்ந்த காஞ்சியை பற்றி சில வரிகள் குறிப்பிட விரும்புகிறேன் ,காஞ்சிபுரம் , கோவில்களுக்கும், பட்டுக்கும், மற்றும் சங்கர மடத்திற்கும் பெயர் பெற்றது .



ஏகாம்பரநாதர்
பொதுவாக இங்கு வரும் சுற்றுலா பயணிகள் ஏகாம்பரநாதர் , காமாட்சி அம்மன் மற்றும் வரதராஜ பெருமாள் கோவில்களுக்கு மட்டுமே செல்கின்றனர் . ஆனால் அது தவிர பல சிறப்புமிக்க கோவில்கள் உள்ளன .
காமாட்சி அம்மன்
10 வருடங்களுக்கு முன் காஞ்சி பட்டுக்கு மிகுந்த தேவை இருந்தது , ஆனால் இப்பொழுது அதிக போலி , நெசவாளர்களுக்கு நியாவிலை கிடைக்காமை மற்றும் தரகர்களாலும் மிகுந்த ஏமாற்றம் அடைந்த மக்கள் காஞ்சி பட்டு பக்கம் அதிகம் செல்லாமல் இருக்கின்றனர்.


வரதராஜ பெருமாள்


காஞ்சி பெரியவர்கள்


எங்களின் முக்கிய பொழுதுபோக்கே கோவில் திருவிழாக்கள்தான் , நெல் , கேழ்வரகு இங்கு முக்கிய பயிர் வகைகள் ஆகும் .

இனிதே ஆரம்பம்


வணக்கம் மக்களே ,
ஒண்ணும் இல்ல சும்மா பிள்ளையார் சுழி போட்டு ஆரம்பிச்சி இருக்கேன் .
அவர் ஆதரவும் உங்கள் ஆதரவும் வேணும் .