விவேகானந்தர் வாழ்வில் நடந்த நிகழ்ச்சி
அறிவியல் புரட்சியால் உலகை திரும்பி பார்க்கவைத்த அமெரிக்காவை , இந்தியாவின் பக்கம் திரும்ப செய்ததில் பெரும்பங்கு விவேகானந்தரை சாரும் .
அமெரிக்காவில் பல இடங்களில் அவர் சொர்பொழிவு செய்தார் , அவ்வாரு ஒரு இடத்தில் சொர்பொழிவு முடித்துவிட்டு , மக்களிடம் சகஜமாக பேசிக்கொண்டு இருந்தார் .
அப்பொழுது ஒரு பெண்மனி , அவரிடம் " நீங்கள் என்னை கல்யாணம் செய்து கொள்விற்களா" என்று கேட்டாள்.ஒரு நிமிடம் விவேகானந்தர் அதிர்ந்துவிட்டார் , பொதுவாக அமெரிக்கர்கள் வெளிபடையானவர்கள்.
விவேகானந்தர் அப் பெண்மனியை பார்த்து கேட்டார்" என்னிடம் உள்ள எது , உங்களை அவ்வாறு கேட்க தூண்டியது ? ,ஏன் எனில் நான் அதை திருத்தி கொள்ளவேண்டும்" என்றார்

அதற்கு அப்பெண்மனி சொன்னாள் " உங்களின் அறிவு திறன் [ Your Intelligent ] ஆகையால் உங்களை நான் திருமணம் செய்துகொண்டால் , உங்களை போல அறிவுள்ள குழந்தை பெற்று கொள்ளவே நான் கேட்கிறேன்"என்றாள் .
அதற்க்கு விவேகானந்தர் சிரித்துகொன்டே கூறினார் " அம்மா அதற்க்கு நீங்கள் 1 வருடம் காத்திருக்க வேண்டும் அதுமட்டும்மில்லை அறிவுள்ள பிள்ளைக்கும் உத்திரவாதம் இல்லை, ஆகையால் என்னையே உங்கள் மகனாக ஏற்றுக்கொள்ளுங்கள்" என்று கூறினார்
குறிப்பு: மக்களே, நமக்கு நம் முன்னோர்கள் விட்டுசென்றுள்ள பெருமைகளை பார்திர்களா ! .
3 comments:
ஏற்கனவே தேரிந்த கதைதான்... இருந்தாலும் படிப்பதற்கு அருமையாக இருக்கிறது... தொடடுங்கள்... வாழ்த்துக்கள்
நன்றி விக்னேஷ்வரன், நான் படித்த மற்றும் கேட்ட விஷயங்களை இங்கே எழுதுகிறேன் . சொந்தமா எழுத நிறைய சரக்கு வேணுமாம் ! :)
If I would have been Vivek, my generation would now be Americanos. hiii..hiii
Post a Comment